< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தரபிரதேசத்தில் சுதந்திர தின விழாவில் நடனமாடிய 2 போலீசார் - காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
|18 Aug 2022 5:54 AM IST
சீருடையிலேயே நடனமாடியது தொடர்பாக இரண்டு போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் புரான்பூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இ்தில் எஸ்.ஐ. சவுராப் குமார் மற்றும் அனுஜ் என்ற போலீஸ்காரர் ஆகியோர் சீருடையிலேயே நடனமாடினர்.
இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை தானாக முன்வந்து விசாரித்த பிலிபிட் போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், மேற்படி நடனமாடிய சவுராப் குமார் மற்றும் அனுஜ் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கவும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, எஸ்.பி. உத்தரவிட்டு உள்ளார். இந்த நடவடிக்கை பிலிபிட் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.