பிரதமர் பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: என்.ஐ.ஏ. காவலில் இருந்து தப்பியவர் 10 ஆண்டுகளுக்குப்பின் கைது
|பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, என்.ஐ.ஏ. காவலில் இருந்து தப்பியவர் 10 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்யப்பட்டார்.
பாட்னா,
பீகார் தலைநகர் பாட்னா காந்தி மைதானத்தில் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு இருந்தார். இந்த மைதானத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். 70-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மெகர் ஆலம் என்பவர் உள்பட பலரை தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர். இதில் மெகர் ஆலம் என்.ஐ.ஏ. காவலில் இருந்து தப்பி ஓடினார். சுமார் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தர்பங்கா நகரில் நேற்று முன்தினம் மாலையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மெகர் ஆலம் சிக்கினார். அவரை கைது செய்த அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.