ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் தகவல்...!
|ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக ஆய்வில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் உலகிலேயே இந்தியா முதல் இடத்துக் உள்ளதாக கவுன்ட்டர் பாயின்ட் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
கவுன்ட்டர் பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடத்திய உலகம் முழுவதும் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை குறித்து ஆராய்ந்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஸ்மார்ட் வாட்ச் சந்தை 171 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும்,இந்தியாவில் அண்மையில் வந்த தொடர் பண்டிகைகளே முக்கிய காரணமாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், நாய்ஸ், போட் (boat) பயர் போல்ட் (firebolt) ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. நடுத்தர குடும்பத்தினர் வாங்கிக்கொள்ளும் விலை, இந்தியாவில் உற்பத்தி, ஆகியவை இந்திய சந்தையில் ஸ்மார்ட் வாட்ச்கள் அதிகம் விற்க முக்கிய காரணியாக கருதப்படுகிறது. ஆப்பிள் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனையும் 48 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.