< Back
தேசிய செய்திகள்
சார்ஜ் செய்யும்போது விபத்து- ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 7  எலக்ட்ரிக்  பைக்குகள் தீயில் கருகின
தேசிய செய்திகள்

சார்ஜ் செய்யும்போது விபத்து- ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகின

தினத்தந்தி
|
19 July 2022 9:45 AM IST

இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மார்க்கெட் யார்டின் கங்காதம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது இ பைக் ஷோரூமில் 7 எலக்ட்ரிக் பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து கருகின.

நேற்று இரவு பைக்குகளுக்கு சார்ஜ் தீசெய்யும்போது 7 எலக்ட்ரிக் பைக்குகள் தீப்பிடித்ததாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

விபத்து குறித்து தீயணபை்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:- பைக்குகள் சார்ஜ் செய்வதற்காக இணைக்கப்பட்டிருந்தன. அப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு தீ பிடித்து பைக்குகள் எரிந்து நாசாமானது. தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்