< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பி.எம்.டி.சி. பஸ் மோதி அரசு பள்ளி ஆசிரியை சாவு
|2 Sept 2022 2:37 AM IST
அரசு பஸ் மோதி அரசு பள்ளி ஆசிரியை பலியானார்.
பெங்களூரு:
பெங்களூரு நாகரபாவி சர்க்கிள் பகுதியில் நேற்று மாலை ஒரு பி.எம்.டி.சி. பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற ஒரு பெண் மீது பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் சந்தோஷி (வயது 55) என்பதும், அவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.