< Back
தேசிய செய்திகள்
திருட சென்ற வீட்டில் ஏ.சி. போட்டு தூங்கிய திருடன்... தட்டி எழுப்பிய போலீசார்
தேசிய செய்திகள்

திருட சென்ற வீட்டில் ஏ.சி. போட்டு தூங்கிய திருடன்... தட்டி எழுப்பிய போலீசார்

தினத்தந்தி
|
3 Jun 2024 8:54 PM IST

திருடன் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து அசந்து தூங்கியிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

லக்னோ,

வீடு ஒன்றில் திருட சென்ற திருடன், ஏசியை போட்டு நன்றாக தூங்கி போலீசில் சிக்கிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் பாண்டே. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வாரணாசிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், நேற்று (02-06-24) சுனில் பாண்டே வீட்டின் முன் கேட் உடைந்திருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் சுனில் பாண்டேவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சுனில் பாண்டேவின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு திருடன் ஒருவன் தலையணையை வைத்து அசந்து தூங்கியிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, திருடனை தட்டி எழுப்பி கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுனில் பாண்டேவின் வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட திருடன் வீட்டின் முன் கேட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதிகமாக மது அருந்தியதால் போதையில் அங்கு ஒரு அறைக்கு சென்று ஏ.சியை போட்டு அசந்து தூங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்