< Back
தேசிய செய்திகள்
லக்னோவில் இருந்து அபுதாபி புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு - டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
தேசிய செய்திகள்

லக்னோவில் இருந்து அபுதாபி புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு - டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்

தினத்தந்தி
|
17 Sept 2023 7:59 AM IST

லக்னோவில் இருந்து அபுதாபி புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து நேற்று இரவு 10 மணியளவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 155 பேர் பயணித்தனர்.

லக்னோவில் இருந்து புறப்பட்ட சில நிமிடத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விமானம் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்