< Back
தேசிய செய்திகள்
கண்ணூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மாணவர்களின் தகவல்கள் திருட்டு
தேசிய செய்திகள்

கண்ணூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மாணவர்களின் தகவல்கள் திருட்டு

தினத்தந்தி
|
23 Nov 2022 3:31 AM IST

திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் ‘டார்க் வெப்’ எனப்படும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பயிலும் சுமார் 30 ஆயிரம் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் 'டார்க் வெப்' எனப்படும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை கொச்சியில் உள்ள தனியார் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி கண்டறிந்துள்ளது. பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்பட்ட பிழையின் காரணமாக இந்த தகவல் திருட்டு நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்