சிசோடியாவை சி.பி.ஐ. சித்ரவதை செய்கிறதா? - ஆம் ஆத்மி புகாரால் பரபரப்பு
|சிசோடியாவை சி.பி.ஐ. சித்ரவதை செய்வதாக ஆம் ஆத்மி அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி துணை முதல்-மந்திரி பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியாவை மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கடந்த 26-ந்தேதி கைது செய்தது.
அதைத் தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரைக் காவலில் எடுத்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த காவல் இன்று (6-ந் தேதி) முடிகிறது.
இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுரப் பரத்வாஜ், நிருபர்களிடம் நேற்று பேசினார்.
அப்போது அவர், " மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிகாரிகள் சித்ரவதை செய்கின்றனர். தவறான குற்றச்சாட்டுகள் கொண்ட ஆவணங்களில் கையெழுத்து போடுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ.யிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் எந்த ஆதாரம் பற்றியும் வாய் திறந்தது இல்லை. அவரது வீட்டில் சோதனை நடத்தியும் எதுவும் கண்டறியப்படவில்லை" என கூறினார்.
இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.