< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பதவி விலகியவருக்கு பதிலாக டெல்லியில் புதிய மந்திரி பதவி ஏற்பு
|5 Nov 2022 4:41 AM IST
மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, கடந்த மாதம் 9-ந் தேதி ராஜேந்திரபால் கவுதம் பதவி விலகினார்.
புதுடெல்லி,
டெல்லி அரசில் சமூக நலத்துறை மந்திரியாக இருந்தவர் ராஜேந்திரபால் கவுதம். இவர் ஒரு மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, கடந்த மாதம் 9-ந் தேதி பதவி விலகினார்.
இந்தநிலையில், அவருக்கு பதிலாக, ராஜ்குமார் ஆனந்த் புதிய மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் வி.கே.சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ராஜேந்திரபால் கவுதம் வகித்த சமூக நலம், எஸ்.சி., எஸ்.டி., கூட்டுறவு சங்கங்கள், குருத்வாரா தேர்தல் ஆகிய இலாகாக்களை ராஜ்குமார் ஆனந்த் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.