< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் பாடகர் படுகொலை: ஆம்ஆத்மி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்தது  - காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

பஞ்சாப் பாடகர் படுகொலை: ஆம்ஆத்மி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்தது - காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
29 May 2022 9:05 PM GMT

ஆம்ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வலாக் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று முன் தினம் மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்கு மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைக்கு கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கும்பல் மற்றும் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாக போலீசாா் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் தார்மீக அதிகாரத்தை இழந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, ஆம்ஆத்மி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்