பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரை எதிர்பார்க்கும் ஆம் ஆத்மி
|கடந்த 2019-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் மோடிக்கு எதிராக ஒன்று திரட்டினார் என்று சவுரவ் பரத்வாஜ் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை அரவணைத்துத்தான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை உள்ளது.
இதை சுட்டிக்காட்டி, ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி சுகாதாரத்துறை மந்திரியுமான சவுரவ் பரத்வாஜ், இரு கட்சிகளும் பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என்று மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சுவையான உண்மைகள். கடந்த 2019-ம் ஆண்டு, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் மோடிக்கு எதிராக ஒன்று திரட்டினார். அதுபோல், 2024-ம் ஆண்டு, மோடிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் நிதிஷ்குமார் ஒன்று திரட்டினார். தற்போது அவர்கள் கையில்தான் எல்லாம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.