< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டுக்கொலை
|1 Jun 2024 5:15 PM IST
பஞ்சாப்பில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆம் ஆத்மி பிரமுகர் உயிரிழந்தார்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் அஜ்னாலா பகுதியில் உள்ள லகுவால் என்ற கிராமத்தில், நேற்று இரவு வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் தீபிந்தர் சிங் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த தீபிந்தர் சிங் சமீபத்தில்தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.