< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்" - அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை
|18 Dec 2022 10:35 PM IST
2027-ம் ஆண்டு குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 11-வது தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் தேர்தலில் 14 சதவீத வாக்குகள் பெற்று 5 எம்.எல்.ஏ.க்கள் வெற்று பெற்றுள்ளதாகவும், 2027-ம் ஆண்டு குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார்.
சீனாவுடனான வர்த்தகத்தை இந்தியா அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், சீனப் பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தனது தொலைநோக்குப் பார்வை ஆம் ஆத்மி கட்சிக்கு மட்டுமில்லாமல், நாட்டின் வளர்ச்சி மீது உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.