< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை
|4 Oct 2023 5:58 PM IST
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,
மதுபான விநியோக கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து சஞ்சய் சிங் எம்.பி.யை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெல்லி அரசின் மதுபான விநியோக கொள்கையில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் ஏற்கனவே முன்னாள் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.