< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி - முதல்-மந்திரி பகவத்மான் அதிரடி
|24 Jan 2024 3:43 PM IST
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி நீடிக்கிறது எனவும் முதல்-மந்திரி பகவத்மான் தெரிவித்துள்ளார்.
சண்டீகர்,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என முதல்-மந்திரி பகவத்மான் அறிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப்பில் தொகுதி பங்கீடு செய்வதில் காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக உள்ளது எனவும் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி நீடிக்கிறது எனவும் முதல்-மந்திரி பகவத்மான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .