< Back
தேசிய செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜை - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பூஜை - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
19 July 2022 3:10 PM IST

ஆடி மாத பூஜையை முன்னிட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், நாள்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆடி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தற்போது பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இதையடுத்து வழக்கத்தை விட அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களின் வசதிக்காக பம்பையில் உடனடி முன்பதிவு மையம் செயல்பட்டு வருவதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்