< Back
தேசிய செய்திகள்
நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து
தேசிய செய்திகள்

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து

தினத்தந்தி
|
25 March 2024 1:53 AM IST

பழங்கள் பாரத்துடன் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்தவர் அமான் (வயது 22). தலையில் முடிவளர்ச்சி குறைபாடு கொண்ட இவர் முகர்ஜிநகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் இவரை பார்த்து ஏளனமாக சிரித்து கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அமான் அங்கு பழங்கள் பாரத்துடன் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் இருந்து கத்தியை எடுத்து வந்து இளம்பெண் மேல் பாய்ந்தார். பின்னர் அவரை சாலையில் தள்ளிவிட்டு சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க முயன்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பியோடினார். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட அமான் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்