< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முடி கொட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் தற்கொலை..!
|3 July 2022 1:42 PM IST
பெங்களூர் அருகே தலைமுடி உதிரி பிரச்சினையால் பாதித்த இளம் பெண் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூர்:
பெங்களூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் மைசூர் தனியார் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு மருத்துவ நர்சிங் பயிற்சி படிப்பு படித்து வருகிறார்.
இவருக்கு பல நாட்களாக தலை முடி உதிரத் தொடங்கியது, சிகிச்சை பெற்றுக் கொண்டாலும் பலன் இல்லாத காரணத்தால், மற்றும் முடி உதிரி மொட்டை தலை மாதிரி ஆனதால் மனம் நொந்து, எனது சாவுக்கு நானே காரணம் என்று மரண கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் தங்கியிருந்த வாடகை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சக தோழியர்கள் மூலமாக தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.