ஆசை வார்த்தை கூறி உல்லாசம்: போலீஸ்காரர் மீது இளம்பெண் புகார்
|மேலும் அடிக்கடி தனிமையில் இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூரு கோவிந்தபுரா போலீஸ் நிலையத்தில் ஆனந்த் பட்டீல் என்பவர் போலீஸ்காரராக இருந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் பெண் போலீஸ் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். மேலும் அடிக்கடி தனிமையில் இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். சுமார் 1½ ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆனந்த் பட்டீல் தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பெண் போலீஸ் குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதுகுறித்து ஆனந்த் பட்டீலிடம் கேட்டால் சாதியை காரணம் காட்டி திருமணத்திற்கு மறுப்பதாக அந்த இளம்பெண் கூறினார். இதனால் பெண் போலீஸ் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி வருகிறார். இதுதொடர்பாக பானசவாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது