குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்
|சமூகவலைதளம் மூலம் பழக்கமான இளம்பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு வாலிபர் அழைப்பு விடுத்தார்.
மும்பை,
மும்பையை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு, சமூகவலைத்தளத்தில் வாலிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இருவரும் செல்போன் எண்களை பறிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்தநிலையில் வாலிபர் இளம்பெண்ணை தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனால் வாலிபரை சந்திக்க கடந்த வாரம் இளம்பெண் அவரது வீட்டிற்கு சென்றார்.
அங்கு இளம்பெண்ணுக்கு வாலிபர் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்தார். இதை குடித்த சில நிமிடங்களில் இளம்பெண் மயங்கி சரிந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வாலிபர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்தநிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்து வாலிபரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இளம்பெண்ணை வீட்டில் இருந்த அறையில் போட்டு அடைத்து வைத்தார். பின்னர் வெகுநேரம் கழித்து இளம்பெண்ணை விடுவித்தார். மேலும்
இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் இளம்பெண் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.