< Back
தேசிய செய்திகள்
குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண் கைது

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

குழந்தைகளை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண் கைது

தினத்தந்தி
|
13 Feb 2024 5:43 AM IST

மனைவி காணாமல் போனது குறித்து கணவர் கோட்டாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார்.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கண்ணோத் பகுதியை சேர்ந்தவர் டாம்சி (வயது 36). இவருக்கு திருமணமாகி கணவர், 3 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே டாம்சிக்கும், அனக்கம்பொயில் பகுதியை சேர்ந்த ஜினு (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாம்சியை காணவில்லை. இதுகுறித்து அவரது கணவர் கோட்டாஞ்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் டாம்சியின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், டாம்சி, ஜினு ஆகிய 2 பேரும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் அங்கு சென்று 2 பேரையும் பிடித்து கோழிக்கோட்டுக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் குழந்தைகள், கணவரை தவிக்க விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் டாம்சி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து டாம்சி, ஜினு இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்