< Back
தேசிய செய்திகள்
பெண்ணுக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் - ஒருவர் கைது
தேசிய செய்திகள்

பெண்ணுக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் - ஒருவர் கைது

தினத்தந்தி
|
6 Sept 2024 3:46 AM IST

பெண்ணுக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் மதுபோதையில் இருந்த இளம்பெண்ணை சாலையில் ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அந்த விடியோவில் இருந்த நபரை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர் ஏமாற்றி வந்துள்ளார் என்பதும், அந்த பெண்ணுக்கு மது ஊற்றிக் கொடுத்து, பின்னர் அந்த பெண்ணை சாலையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்