< Back
தேசிய செய்திகள்
வாடகைக்கு வீடு தேடிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

வாடகைக்கு வீடு தேடிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
31 Oct 2023 9:54 PM IST

மயக்க மருந்து கலந்த தண்ணீரை வாங்கி குடித்த அப்பெண், சுய நினைவை இழந்தார்.

புதுடெல்லி,

வடக்கு டெல்லியின் புராரி பகுதியில் 30 வயதான பெண் ஒருவர், வாடகைக்கு வீடு தேடி அலைந்துள்ளார். அப்போது வீட்டு புரோக்கரான ஜிதேந்திர சவுத்ரி என்பவரை தொடர்புகொண்டு வாடகைக்கு வீடு அமைத்துக்கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

அப்போது, வாடகைக்கு வீடு ஒன்று உள்ளது என்றும், வீட்டைக் காண்பிப்பதாகவும் கூறி, ஜிதேந்திர சவுத்ரியும் அவரது நண்பரும் அந்தப் பெண்ணை ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அப்பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த தண்ணீரைக் கொடுத்துள்ளனர்.

மயக்க மருந்து கலந்த தண்ணீரை வாங்கி குடித்த அப்பெண், சுய நினைவை இழந்தார். இதையடுத்து அப்பெண்ணை இருவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்