ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
|செல்லகெரே தாலுகா அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது.
சித்ராதுர்கா :-
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா மதுகனஹட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மனைவி சுசித்ரா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சுசித்ராவுக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே குடும்பத்தினர் சுசித்ராவை மீட்டு ஆம்புலன்சில் சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சுசித்ராவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. அதையடுத்து அவருக்கு ஆம்புலன்சில் இருந்த செவிலியர் மஞ்சுளா பிரசவம் பார்த்தார்.
அப்போது சுசித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவா்களை சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாயும்-சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த செவிலியர் மஞ்சுளாவை பலரும் பாராட்டினர்.