< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? ஆக.28 -ல் காரிய கமிட்டி கூட்டம்
|24 Aug 2022 11:23 AM IST
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக்கூட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.