திருநங்கை வேடமிட்டு விபசாரம் நடத்தியவர் கைது
|பெங்களூருவில் திருநங்கை வேடமிட்டு விபசாரம் நடத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
பெங்களூரு:-
தர்ம-அடி
பெங்களூரு பாகலகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெங்களூரு-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் காலி இடத்தில் சிறிய குடிசை அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு விபசார தொழில் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டது. மேலும் சேத்தன் என்பவர் திருநங்கை வேடம் அணிந்து இந்த விபசார தொழில் நடத்தி வந்ததும் அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து, சேத்தனை பிடித்து அப்பகுதி மக்கள் தர்ம-அடி கொடுத்தார்கள். இதுபற்றி பாகலகுன்டே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சேத்தனை கைது செய்தார்கள்.
விபசார தொழில்
சேத்தனுக்கு தாசரஹள்ளியில் சொந்தமாக வீடு உள்ளது. அங்கு அவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். ஆனாலும் திருநங்கை போல் வேடமிட்டு தேசிய நெடுஞ்சாலையில் வரும் டிரைவர்கள், தனியாக செல்பவர்களை அழைத்து விபசார தொழில் நடத்தி சேத்தன் பணம் சம்பாதித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை அருகே அமைத்திருந்த குடிசை இடித்து அகற்றப்பட்டது. கைதான சேத்தன் மீது பாகலகுன்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.