< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கப்பன் பூங்காவில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்
|12 Aug 2022 2:43 AM IST
பெங்களூரு கப்பன் பூங்காவில் வைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெங்களூரு:
தமிழகத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது உறவினர் ஒருவர், தனது மனைவி மற்றும் 20 வயது மகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பெங்களூருவுக்கு வந்த ரமேஷ், தனது உறவினரின் மகளான இளம்பெண்ணை தொடர்புகொண்டு சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி அவர்கள் 2 பேரும் கப்பன் பூங்காவில் சந்தித்தனர். இந்த நிலையில் கப்பன் பூங்காவில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற ரமேஷ், அங்கு வைத்து அவரை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
பின்னர் இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து இளம்பெண், கப்பன் பூங்கா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.