< Back
தேசிய செய்திகள்
பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

தினத்தந்தி
|
14 May 2024 7:56 AM IST

மாணவி அளித்த புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவி ஒருவர், மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். பஸ்சில் இருந்து இறங்கிய மாணவி, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் பயணிப்பதற்காக நடந்து சென்றார். அப்போது மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்தே மாணவியை பின்தொடர்ந்து வந்த ஒரு வாலிபர், மாணவியை கிண்டல் செய்ததுடன் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

உடனடியாக அந்த மாணவி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், விரைந்து வந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து சென்றனர். மாணவி அளித்த புகாரின் பேரில் அந்த வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் செய்திகள்