< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் சிறுவனை கொலைவெறியுடன் கடித்து குதறிய தெரு நாய்...!
|12 Sept 2022 3:53 PM IST
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் சில மாதங்களாக தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. தெருநாய்க்கடிக்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கோழிக்கோட்டில் உள்ள அரக்கிணறைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நூராஸ் வீட்டில் இருந்து வெளியே சைக்கிளில் கிளம்பிய போது ஓடி வந்த தெருநாய், சிறுவனைக் கண்மூடித் தனமாக கை, கால் என எல்லா பக்கங்களிலும் கடித்துக் குதறியது.
விடாமல் கடித்துக்குதறிய அந்த நாயிடம் இருந்து சிறுவன் போராடி எழுந்து வீட்டிற்குள் ஓடினான். இதையடுத்து அந்த நாய் சிறுவனை விட்டுச்சென்றது. தற்போது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறான்.