< Back
தேசிய செய்திகள்
கேரளாவில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு பூஜை
தேசிய செய்திகள்

கேரளாவில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
11 Jun 2023 8:53 AM IST

கேரள மாநிலம், பாலக்காட்டில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.

பாலக்காடு,

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்காஞ்சேரியில் உள்ள மகா கணபதி கோயிலில், கேரள பெண் ஒருவரின் நன்கொடையில் அஷ்ட திரவிய மகா யாகமும் பூஜையும் நடைபெற்றது.

அரிக்கொம்பன் யானையின் உடல் நலம் சீராக இருக்கவும், அந்த யானையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் இந்த பூஜை நடைபெற்றுள்ளது. அரிக்கொம்பன் யானை, கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி சென்றாலும், அந்த யானையை நேசிக்கும் மக்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மேலும் செய்திகள்