< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் கூடுதலாக சட்னி கேட்ட வாடிக்கையாளரை கத்தியால் குத்திய கடைக்காரர்..!
|12 Jan 2024 8:27 PM IST
முகத்தில் இரண்டு கத்திக்குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சந்தீப் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுடெல்லி,
டெல்லி சஹ்தாரா விஸ்வாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த விகாஸ் என்பவரது உணவகத்தில், சந்தீப் என்ற நபர் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது சந்தீப், தனக்கு கூடுதலாக சட்னி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கடைக்காரர் விகாஸ் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோபமடைந்த விகாஸ், கத்தியை எடுத்து சந்தீப்பை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். முகத்தில் இரண்டு கத்திக்குத்து காயங்களுடன் வலியால் துடித்த சந்தீப்பை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான விகாஸை தீவிரமாக தேடி வருகின்றனர்.