ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை தாக்கிய ரெயில்வே கேட் கீப்பர்
|தனிமையில் இருந்த பெண்ணை ரெயில்வே கேட் கீப்பர் ஜெய்கணேஷ் அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
திருபுவனை,
புதுவை மாநிலம் திருபுவனை அருகே உள்ள நல்லூர் குமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது 40). ரெயில்வே கேட் கீப்பராக உள்ளார். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர்.
அதே பகுதியில் அவரது உறவினர் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவரது கணவர் சென்னையில் வேலைபார்த்து வருவதால் அந்த பெண் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த பெண் தனிமையில் இருப்பதை அறிந்த ஜெய்கணேஷ் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை அந்த பெண் கண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று ஜெய்கணேஷ் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணை கட்டையால் சரமாரியாக தாக்கியதுடன் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். இதனால் அந்த பெண் சத்தம் போடவே ஜெய்கணேஷ் தப்பியோடி விட்டார்.
தாக்குதலில் காயமடைந்த அந்த பெண் மதகடிப்பட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஜெய்கணேசை வலைவீசி தேடி வருகின்றனர்.