< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் பயங்கரம்: சிறைக்குள் பெண் டாக்டரை கற்பழிக்க முயன்ற கைதி..!
தேசிய செய்திகள்

டெல்லியில் பயங்கரம்: சிறைக்குள் பெண் டாக்டரை கற்பழிக்க முயன்ற கைதி..!

தினத்தந்தி
|
27 Sep 2022 10:20 PM GMT

சிறைக்குள் பெண் டாக்டரை கைதி ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள மன்டோலி சிறையில் உள்ள கைதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பெண் டாக்டர் ஒருவர் உள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல கைதிகளின் உடல்நிலையை பரிசோதனை செய்தார்.

அப்போது கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர், திடீரென பெண் டாக்டரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் அவரை கற்பழிக்க முயன்றார். உடனே டாக்டர் அலறியதால் அங்கிருந்த சிறை காவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியை பிடித்து விசாரித்து வருகிறார்கள். பலாத்காரம்

சிறைக்குள் பெண் டாக்டரை கைதி ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்