< Back
தேசிய செய்திகள்
வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய அா்ச்சகர்; போக்சோவில் கைது
தேசிய செய்திகள்

வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய அா்ச்சகர்; போக்சோவில் கைது

தினத்தந்தி
|
19 Nov 2022 12:15 AM IST

வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அர்ச்சகரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மங்களூரு:

சிறுமிக்கு பாலியல் தொல்லை

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் அருேக உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறாள். அவளது தந்தை இறந்துவிட்டார். இந்த நிலையில், சிறுமியின் தாய், தும்பே அருகே ராமநிவாஸ் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் கரந்தா என்பவரை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.

வெங்கடேஷ் அந்தப்பகுதியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இந்த நிலையில் அவர், வளர்ப்பு மகளான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறவில்லை.

கர்ப்பம்

இதனை பயன்படுத்தி கொண்ட வெங்கடேஷ், கடந்த 4 மாதங்களாக வளர்ப்பு மகளான சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டாள். இதனால் சிறுமியை, அவளது தாய் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இதுகுறித்து அவளிடம் கேட்டுள்ளார். அப்போது வளர்ப்பு தந்தையான வெங்கடேஷ், பலாத்காரம் ெசய்ததை தனது தாயிடம் கூறி சிறுமி கதறி அழுதுள்ளாள். இதனை கேட்டு அவர் மேலும் அதிர்ந்து போனார்.

கைது

இதுகுறித்து பண்ட்வால் போலீசில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்