< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருச்சூர் கலெக்டராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்
|19 July 2024 11:56 PM IST
திருச்சூர் கலெக்டராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சூர்,
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்த கிருஷ்ண தேஜா மாநிலங்களுக்கு இடையேயான பணி மாறுதல் மூலம் ஆந்திராவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து மாநில தொழிலாளர் நலத்துறை ஆணையாளராகவும், தலைமை செயலாளரின் தனி அலுவலராகவும் இருந்த தமிழகத்தை சேர்ந்த அர்ஜுன் பாண்டியன் திருச்சூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் வகித்து வந்த பொறுப்புகள், வேலைவாய்ப்பு இயக்குனர் வீனா என்.மாதவனுக்கும், ஸ்ரீ லட்சுமிக்கு தலைமை செயலாளரின் தனி அலுவலராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.