< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒரு வயது சிறுமி உயிரிழப்பு... பரவுகிறதா புதிய காய்ச்சல்?
|17 Jun 2023 9:30 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது சிறுமி அகல்யா உயிரிழந்தாள்.
பத்தனம்திட்டா,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது சிறுமி அகல்யா உயிரிழந்தாள். பத்தனம்திட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியை எந்த வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்பதை கண்டறிய உடற்கூராய்வு செய்யப்பட உள்ளது.
கேரளாவில் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா உள்ளிட்ட நோய் பரவுவதால், காய்ச்சல் ஏற்பட்ட உடன் மக்கள் மருத்துவரை அணுக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.