< Back
தேசிய செய்திகள்
சாலையில் நடந்து சென்ற நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை
தேசிய செய்திகள்

சாலையில் நடந்து சென்ற நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை

தினத்தந்தி
|
12 Aug 2024 3:58 PM IST

சாலையில் நடந்து சென்ற நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சோழதேவனஹள்ளி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. அங்கு வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் நர்சிங் படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவி கல்லூரி அருகே உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார்.

உடனே வாலிபர் அங்கிருந்து ஓடி தப்பிச்சென்றார். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாலிபரை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்து, அங்கிருந்து ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி பசவராஜ் என்ற வாலிபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்