< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வாட்ஸ்-அப்பில் விரைவில் வரும் புதிய அம்சம்...!
|26 Sept 2022 11:53 PM IST
வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாகும்.
புதுடெல்லி,
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்-அப்பில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது வெகு விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது கார்ட்டூன் அவதாரை அதில் உருவாக்கி, பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கென பிரத்யேக அம்சம் ஒன்றை அந்த தளம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பயனர்கள் தங்கள் அவதாரை சாட் செய்யும்போது ஸ்டிக்கராகவும், வீடியோ கால் அழைப்பின்போது மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுகிறது. செட்டிங்ஸ் அடிப்படையில் தானியங்கு முறையில் இந்த அவதாரை வாட்ஸ்அப் ஒவ்வொரு பயனருக்கும் உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.