< Back
தேசிய செய்திகள்
ஜாமினில் வெளிவந்த ரவுடி துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கும்பல்....சினிமா பாணியில் சம்பவம்
தேசிய செய்திகள்

ஜாமினில் வெளிவந்த ரவுடி துடிக்க துடிக்க வெட்டி கொன்ற கும்பல்....சினிமா பாணியில் சம்பவம்

தினத்தந்தி
|
5 Aug 2023 10:27 PM IST

சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை, இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை, இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களுரில் பிரபல ரவுடியான மதன் என்பவரை, சில மாதங்களுக்கு முன் அவரது எதிரியான ரவுடி சித்தாபுரா மகேஷ் கொடூரமாக வெட்டி கொலை செய்தார்.

இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்தாபுரா மகேஷ் ஜாமினில் வந்த நிலையில், அவரது கூட்டாளிகள் காரில் அழைத்து சென்றனர். அப்போது இருசக்கர வாகனத்தில் காரை துரத்திய கும்பல் காரை வழிமறித்து மகேஷை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்