< Back
தேசிய செய்திகள்
சம்பள உயர்வு கேட்டு சென்ற  இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலாளர்...!
தேசிய செய்திகள்

சம்பள உயர்வு கேட்டு சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலாளர்...!

தினத்தந்தி
|
12 Jan 2023 3:23 PM IST

சம்பள உயர்வு கேட்டு சென்ற இளம்பெண்ணை உணவில் போதை மருந்து கொடுத்து நிறுவன மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கவுகாத்தி,

அரியானா மாநிலம், குருகிராமில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக தனது நிறுவன மேலாளர் அழைத்ததன் பெயரில் ஒரு மாலுக்கு சென்றுள்ளார்.

அந்த மாலுக்கு வெளியே இருவரும் பேசுகையில் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட உணவில் மேலாளர் , போதை மருந்து கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த பெண்ணை மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் , மேலும் அந்த பெண்ணை நிர்வாண வீடியோ எடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது நிறுவன மேலாளர் மீது காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்