< Back
தேசிய செய்திகள்
நண்பரின் 5 வயது உறவுக்கார சிறுவனை கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் சாலை விபத்தில் பலி
தேசிய செய்திகள்

நண்பரின் 5 வயது உறவுக்கார சிறுவனை கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் சாலை விபத்தில் பலி

தினத்தந்தி
|
22 Dec 2022 4:29 PM IST

உத்தர பிரதேசத்தில் நண்பரின் 5 வயது உறவுக்கார சிறுவனை கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.


லக்னோ,


உத்தர பிரதேசத்தின் சி.பி. கஞ்ச் பகுதியில் கவுந்தியா கிராமத்தில் வசித்து வருபவர் பாஹீம். இவரது நண்பர் நரேஷ் யாதவ் (வயது 32). ஜம்முவில் வெல்டராக வேலை செய்து வருகிறார். இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால், நரேஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார். பாஹீமின் கிராமத்திற்கு சென்ற அவர், அவரது மருமகன்களான சுபான் (வயது 5) மற்றும் அமான் (வயது 4) ஆகிய இருவரை கடத்தி சென்றுள்ளார்.

இதன்பின்னர், சுபானை கழுத்து இறுக்கி கொலை செய்துள்ளார். இதன்பின்பு, அந்த பகுதியில் இருந்து தப்பி விட்டார். அமானையும் கொலை செய்ய முயன்றுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், அமான் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து தப்பி சென்ற நரேஷ் லக்னோ-டெல்லி சாலையில் பர்தவுலி கிராமம் அருகே நேற்றிரவு செல்லும்போது லாரி மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்