< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தெருநாயை ஸ்கூட்டரில் கட்டி தரதரவென இழுத்துசென்ற நபர் - பெங்களூருவில் பரபரப்பு
|21 July 2024 6:18 AM IST
வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்துவதா என்று அந்த நபரை பலரும் கண்டித்தனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா சிருவா பகுதியில் ஒருவர் வசித்து வருகிறார். அவர் ஒரு தெருநாயின் கழுத்தில் சங்கிலியை கட்டி, அதை தனது ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கட்டினார். அதையடுத்து அவர் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டினார். சிறிது தூரம் ஓடிய நாய், பின்னர் ஓடமுடியாமல் விழுந்துவிட்டது.
அதையடுத்து அந்த நாயை தரதரவென இழுத்தபடி, அந்த நபர் வேகமாக ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றார். இதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். வாயில்லா ஜீவனை இப்படி கொடுமைப்படுத்துவதா என்று கண்டித்தனர். பின்னர் சிலர் அவரின் பிடியில் இருந்து அந்த நாயை விடுவித்தனர். இதில் அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.