< Back
தேசிய செய்திகள்
பாட்னா கோர்ட்டில் குண்டுவெடிப்பு - ஒருவர் காயம்
தேசிய செய்திகள்

பாட்னா கோர்ட்டில் குண்டுவெடிப்பு - ஒருவர் காயம்

தினத்தந்தி
|
1 July 2022 4:38 PM IST

பாட்னா கோர்ட்டில் ஆதாரமாக சமர்பிக்க வைத்திருந்த குண்டு வெடித்ததில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சிவில் கோர்ட்டில் குண்டு வெடித்ததில் போலீஸ் ஒருவர் காயமடைந்தார்.

பாட்னா பல்கலைகழகத்தில் உள்ள படேல் விடுதியில் சில நாட்களுக்கு முன்பு போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு பாட்னா சிவில் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்கு அனுமதி கோரி பாட்னா சிவில் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கு ஆதாரமாக கோர்ட்டில் சமர்பிப்பதற்காக வைத்திருந்த வெடிகுண்டு திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் போலீஸ் கான்ஸ்டபீள் ஒருவர் காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதித்து உள்ளனர்.

இந்த விபத்தில் பெரிய அளவில் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என போலீசார் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்