< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேசிய நெடுஞ்சாலை ஓரம் படுத்திருந்த சிறுத்தைப் புலி.. சாலையில் அச்சத்துடன் சென்ற வாகன ஓட்டிகள்
|20 April 2023 11:55 PM IST
சிறுத்தைப்புலியை பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் பயணித்தனர்.
அமராவதி,
ஆந்திர மாநிலம் அனந்தப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிறுத்தைப் புலி ஒன்று படுத்திருந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
பெங்களூரூ- பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில் படுத்திருந்த அந்த சிறுத்தைப் புலி, அவ்வழியாக சென்ற வாகனங்களை சுமார் 2 மணி நேரம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் பயணித்தனர்