உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு
|வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் தமிழக எம்.பி.க்கள் குழு கோரிக்கை வைக்க உள்ளனர்.
புதுடெல்லி,
மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முடிவு செய்தனர்.
அதன்படி தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் இன்று சந்தித்தனர். திமுகவின் டிஆர் பாலு , காங்கிரஸ் கட்சி ஜெயக்குமார் , மதிமுகவின் வைகோ , முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி , மார்க்சிஸ்ட் கட்சியின் நடராஜன் , விசிக கட்சியின் ரவிக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்த உள்ளனர்.