சட்டப்போராட்டம் நடத்தி கல்லீரல் தானம் செய்து தந்தையின் உயிரை காப்பாறிய சிறுமி - கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்
|கேரளாவில், சட்டப்போராட்டம் மூலம் கல்லீரலை தானமாக வழங்கி, தனது தந்தையின் உயிரை, சிறுமி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர்,
கேரளாவில், சட்டப்போராட்டம் மூலம் கல்லீரலை தானமாக வழங்கி, தனது தந்தையின் உயிரை, சிறுமி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் அருகே கோலாசி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ். ஓட்டல் தொழில் நடத்திவரும் இவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அவரது 17 வயது மகள் தேவானந்தா, தனது கல்லீரலை தந்தைக்கு தானமாக வழங்க முன்வந்த நிலையில், வயதை காரணம்காட்டி மருத்துவர்கள் மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கேரள ஐகோர்ட்டை தேவானந்தா நாடிய நிலையில், சிறுமி அவரது தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியதுடன், சிறுமியை நீதிபதிகள் வெகுவாக பாராட்டினர்.
இந்த நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றதை அடுத்து, இருவரும் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவ செலவை முழுமையாக ஏற்ற மருத்துவமனை நிர்வாகம், சிறுமியின் துணிச்சலை பாராட்டியுள்ளது.