< Back
தேசிய செய்திகள்
யானைத் தந்தத்தில் வடித்த சிலை... மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய வனத்துறையினர்
தேசிய செய்திகள்

யானைத் தந்தத்தில் வடித்த சிலை... மாறுவேடத்தில் சென்று அதிரடி காட்டிய வனத்துறையினர்

தினத்தந்தி
|
17 Sept 2022 12:50 PM IST

இடுக்கி அருகே யானைத் தந்தத்தில் வடித்த சிலைகளை விற்க முயன்ற கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.

மூணாறு:

இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் யானை தந்தத்தில் உருவாக்கிய இரண்டு சிலைகளை சிலர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக வனத்துறையின் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். வனத்துறை நடத்திய விசாரணையில் தொடுபுழா பகுதியை சேர்ந்த ஜோன்ஸ் (வயது 56) இஞ்சியானி பகுதியைச் சேர்ந்த குரியா கோஸ் (47), மடக்கு தானம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (60), ஆகியோர் தான் சிலைகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த மூன்று பேர்களிடம் அந்த சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் வனத்துறையினர் மாறுவேடத்தில் இவர்களை அணுகினார்கள். சிலைகளைப் பார்க்க வேண்டும் விலைக்கு வாங்கிக் கொள்வதாக வனத்துறையினர் மூன்று பேரிடம் கூறினார்கள்.

இதை நம்பிய மூன்று பேரும் அந்த சிலைகளை வனத்துறையினர் என்று தெரியாமல் வனத்துறை புலனாய்வு அதிகாரிகளிடம் கொண்டு வந்து காட்டியுள்ளனர்.

அப்போது அந்த இரண்டு சிலைகளை கைப்பற்றிய வனத்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர். இது குறித்து மூன்று பேர்கள் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்