< Back
தேசிய செய்திகள்
இமாசல பிரதேசத்தில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து; உயிர்ச்சேதம் இல்லை! - வைரலாகும் வீடியோ
தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து; உயிர்ச்சேதம் இல்லை! - வைரலாகும் வீடியோ

தினத்தந்தி
|
9 July 2022 4:52 PM IST

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் இன்று நான்கு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

சிம்லா,

இமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் இன்று நான்கு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

சிம்லாவில் உள்ள சோபால் நகரில் பலத்த மழைக்கு மத்தியில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. அங்குள்ள சோபால் சந்தையில், மதியம் 12.30 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததால், ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகத்தால் காலி செய்யப்பட்டது.

இதன் காரணமாக, கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னர் அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறினர்.

அந்த கட்டிடத்தில் யூகோ வங்கியின் ஒரு கிளை, ஒரு தாபா, ஒரு பார் மற்றும் வேறு சில வணிக நிறுவனங்கள் அமைந்திருந்தன.

இச்சம்பவத்தின் போது வங்கியில் பணிபுரியும் 7 ஊழியர்களில் யாரும் அங்கு இல்லை. இரண்டாவது சனிக்கிழமை என்பதால், கட்டிடத்தின் மேல் தளத்தில் அமைந்துள்ள வங்கிக்கு விடுமுறை விடப்பட்டது.

தரைத்தளத்தில் உள்ள பாரில் அமர்ந்திருந்த சிலர் ஜன்னல் கண்ணாடிகளில் திடீரென விரிசல் ஏற்பட்டதைக் கண்டு, ஆபத்தை உணர்ந்து, உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியே ஓடி வந்து, அங்கு அமர்ந்திருந்தவர்களை எச்சரித்தனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்