< Back
தேசிய செய்திகள்
மின்கசிவால் டயர் கடையில் தீவிபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
தேசிய செய்திகள்

மின்கசிவால் டயர் கடையில் தீவிபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
1 Sept 2022 9:10 PM IST

பெல்தங்கடி அருகே, டயர் கடையில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மங்களூரு;


டயர் கடை

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா சார்மடி சாலையில் வாகன டயர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் நேற்றுமுன்தினம் மதியம் கடையில் ேவலை பாா்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது கடையில் இருந்து திடீரென கரும்புகை வந்துள்ளது. உடனே அவர் உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதைபாா்த்து அதிா்ச்சி அடைந்த அவர் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து வாளிகளில் தண்ணீரை பிடித்து ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் தீ அணையவில்லை. இதையடுத்து அப்பகுதியினர் சம்பவம் குறித்து பெல்தங்கடி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் ெகாடுத்தனர்.

தண்ணீரை பீய்ச்சி அடித்து..

இந்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த தீ, அருகில் இருந்த ஹார்டுவேர் கடைக்கும் பரவியது. இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலும் அணைத்தனர். இந்த தீவிபத்தில் டயர்கடையும் அருகில் இருந்த ஹார்டுவேர் கடையும் முற்றிலும் எரிந்து நாசமானது.

ரூ.5 லட்சம் பொருட்கள்

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர் வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ெபாருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

மேலும் செய்திகள்